search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்"

    ஆரணியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பக்தி பாடல் பாடியதால் 15க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி ஆடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK
    ஆரணி:

    ஆரணி காமக்கூரில் நேற்றிரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தூசி மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் அரையாளம் வேலு வரவேற்றார்.

    வக்கீல் சங்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.

    கூட்டத்தில், பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜிடம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ‘இது ஆன்மீக பூமி, நான் இந்து சமய அறநிலையத்துறையாக இருப்பதால் பக்தி பாடல் பாடுங்கள். பின்னர் பேச்சை தொடங்கலாம் என்றார்.

    அமைச்சர் கேட்டுக்கொண்டதால், பேச்சாளர் செல்வராஜ் ‘மேல்மலையனூர் அங்காளியே’ என்ற அம்மன் பக்தி பாடலை இசையுடன் பாடினார். அப்போது, திரண்டிருந்த பெண் தொண்டர்களில் 15-க்கும் மேற்பட்டோர் தலைவிரி கோலத்துடன் சாமி ஆடினர்.

    இதையடுத்து, தண்ணீர் கொடுத்து சாமி ஆடிய பெண்களை தொண்டர்கள் சமரசப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் பேசியதாவது:- காமக்கூர், நடுக்குப்பம், குன்னத்தூர், சம்புவராய நல்லூர் ஆகிய கிராமங்களில் ரூ.59 லட்சத்தில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார். #ADMK



    போளூர்-சென்னைக்கு 2 புதிய பஸ்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். #ministersevurramachandran

    போளுர்:

    திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்திற்கு 22 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன. போளூர் போக்குவரத்து மணிமனைக்கு 4 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 பஸ்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 2 புதிய பஸ்கள் இயக்கத்தை போளூர் பஸ் நிலையத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ்கள் ஆரணி, ஆற்காடு வழியாக சென்னைக்கு செல்கிறது. 

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் முருகன், போளூர் துணை மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministersevurramachandran

    கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
    கீழ்பென்னாத்தூர்:

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட்ட காட்டுமலையனூர் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து உயர் நிலைப் பள்ளி திறப்புவிழா காட்டுமலையனூரில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வனரோஜா எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி, கலசபாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு தூசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    2017-18ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தபட்டுள்ளது. மேலும் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. எதிர்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

    அதன்படி, கீழ்பென்னாத்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி வைத்த கோரிக்கையான கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை, தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்து சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசினார்.
    செய்யாறில் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில், 3-வது கட்டமாக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி ஆரணியில் தொடங்கியது.இந்த பேரணியில் அ.தி.மு.க.தொண்டர்கள் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று அரசின் சாதனையை விளக்கினர்.

    அதன் தொடர்ச்சியாக செய்யாறு தொகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் வீரம்பாக்கம் கிராமத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், வி.ஏழுமலை எம்.பி., ஒன்றியக்குழு தலைவர் கோமதிரகு, ஜெ.பேரவை செயலாளர் திருமூலன், வெம்பாக்கம் ஒன்றிய துணை செயலாளர் ராஜூ,

    செய்யார் முன்னாள் தொகுதி செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி மஞ்சுளா ராஜ்மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோழவரம் இளங்கோவன் ஆகியோர் தொண்டர்களுடன் தேத்துறை, ஆக்கூர், கூழமந்தல், மாங்கால், அழிஞ்சல்பட்டு, பெரும்புலிமேடு, பல்லி, பெருங்களத்தூர், புளியரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று, செய்யாறு நகரில் லோகநாதன் தெரு, பஸ் நிலையம், ஆரணி கூட்ரோடு வழியாக வடதண்டலம், அருகாவூர், தண்டரை, பெரும்பள்ளம், சேராம்பட்டு வழியாக ஆரணிக்கு சென்றனர்.

    நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர பேரவை செயலாளர் கே.வெங்கடேசன், எம்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×